வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட ஆண்டியார் புளியங்குளம் பகுதியில் இன்று(27) இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இரு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆண்டியார்புளியங்குளம் காட்டுப் பகுதியில் வீதியோரமாக கிடந்த வெடிபொருளை அப்பாதை ஊடாகச் சென்ற 14வயதான சிறுவன் ஒருவன் வீட்டுக்கு எடுத்துச் சென்று அவரின் சக நண்பனுடன் அப் பொருளை சுத்தியலினால் உடைத்துள்ளார். இதன்போது அது வெடித்ததில் இரு சிறுவர்களும் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த சிறுவர்கள் அயலவர்களின் உதவியுடன் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
sri lanka news