கருப்பின இளைஞர் படுகொலை – அமெரிக்கா முழுவதும் ஊரடங்கு உத்தரவு


கருப்பின இளைஞர் படுகொலை தொடர்பாக எதிர்ப்பாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான இடம்பெற்றுவரும் வன்முறை மோதல்களைத் தடுக்கும் முயற்சியாக அமெரிக்கா முழுவதும் உள்ள நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பல பகுதிகளில் போராட்டங்கள் இடம்பெற்றதாகவும் இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் இறப்பர் தோட்டக்கலை பயன்படுத்தி போராட்டக்காரர்களை கலைத்துள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வன்முறைக்கு “கொள்ளையர்கள் மற்றும் அராஜகவாதிகள்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்காவின் மின்னசொட்டா மாகாணத்தில் உள்ள மின்னாபொலிஸ் என்ற இடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் 46 வயதான ஆப்பிரிக்க அமெரிக்கர், பொலிஸார் தாக்கியதில் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக குறித்த பொலிஸ் அதிகாரியை நாளை திங்கட்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மின்னசொட்டாவில் கலவரம் வெடித்ததுடன் அங்கிருந்த பொலிஸ் நிலையங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டது.

தொடர்ந்து குறித்த இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டி வடக்கு கரோலினா, நியூயோர்க், லொஸ் ஏஞ்சலிஸ் மான்ஹாட்டன் உள்ளிட்ட பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றன.

இந்நிலையில் எதிர்ப்பாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான இடம்பெற்றுவரும் வன்முறை மோதல்களைத் தடுக்கும் முயற்சியாக அமெரிக்கா முழுவதும் உள்ள நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here