நாட்டு வெடிபொருள் தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமடைந்த முன்னாள் போராளி அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இந்த தகவலை பளை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இயக்கச்சியைச சேர்ந்த தங்கராசா தேவதாசன் (வயது-43) என்ற முன்னாள் போராளியே சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
கடந்த 3ஆம் திகதி மீன் ரின்னுக்குள் சி4 வெடிமருந்தைப் பயன்படுத்தி நாட்டு வெடிபொருள் செய்த போதே வெடிவிபத்து ஏற்பட்டது என்று பளை பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
சம்பவத்தையடுத்து அவரது மனைவி கைது செய்யப்பட்டார்.
இந்த வெடிவிபத்தையடுத்து முன்னாள் போராளிகள் பலர் தீவிர விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
sri lanka news