பிரேசில் ஜனாதிபதி ஜெயிர் பொல்சொனாரோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. அதிக உஷ்னம் உட்பட நோய் அறிகுறிகள் ஏற்பட்டதை அடுத்து அவர் கடந்த திங்கட்கிழமை நான்காவது தடவையாக மருத்துவ சோதனை மேற்கொண்டிருந்தார்.
கொரோனா வைரஸ் தொற்றை ஒரு “சிறு காய்ச்சல்” என்று கூறி அதன் அச்சுறுத்தல்களை பொல்சொனாரோ தொடர்ந்து குறைத்து மதிப்பிட்டு வந்தார். நாட்டில் முன்னெடுக்கப்படும் முடக்க நிலைகளையும் அவர் எதிர்த்து போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தார். உலகில் அமெரிக்காவுக்கு அடுத்து அதிக கொரோனா வைரஸ் சம்பவங்கள் மற்றும் உயிரிழப்பு பதிவான நாடாக பிரேசில் உள்ளது.
Tags:
world news