1,100 ஆண்டுகளுக்கு முந்தைய தங்க நாணயங்கள் கண்டுபிடிப்பு..!!!


மத்திய இஸ்ரேலில் அகழ்வாராய்ச்சி தன்னார்வ தொண்டுப் பணியில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் 1,100 ஆண்டுகளுக்கு முன் களிமண் சாடியில் புதைக்கப்பட்ட 425 தங்க நாணயங்களை கண்டுபிடித்துள்ளார்.

பெரும்பாலான நாணயங்கள் இந்தப் பிராந்தியம் அப்பாசிய கலீபத்தின் ஓர் அங்கமாக இருந்தபோது ஆரம்ப இஸ்லாமிய காலத்தைச் சேர்ந்ததாக உள்ளன.

345 கிராம் எடை கொண்ட இந்த நாணயங்கள் அது புதைக்கப்பட்ட காலத்தில் கலீபத் நகர் ஒன்றில் ஆடம்பர வீடு ஒன்றை கொள்வனவு செய்ய போதுமான தொகையாக இருந்துள்ளது.

இதற்கு சொந்தமானவர் இதனை தற்காலிக சேமிப்பாக வைத்திருக்கக் கூடும். எனினும் அவரால் மீண்டும் இதனை அடைய முடியாமல்போயுள்ளது.

இதில் உள்ள தங்க நாணயங்கள் தங்க டினார்களாக பயன்படுத்தப்பட்டிருப்பதோடு சிறிதாக வெட்டப்பட்ட நாணயங்கள் சில்லறை நாணயமாக பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று இஸ்ரேல் தொல்பொருள் அதிகாரசபையின் ரொபர்ட் கூல் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here