வரணியில் வாள்வெட்டு இளைஞன் படுகாயம்..!!!


வரணி இயற்றாலை பகுதியில் வாள் வெட்டு காயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்த இளைஞர் ஒருவர் பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க் கிழமை இரவு 7.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இதில் சாந்தகுமார் சதுசன் வயது 20 என்பவரே வாள்வெட்டுக்குள்ளானார்.

மேசன் வேலைக்கு செல்லும் குறித்த இளைஞன் வேலையை முடிந்து பேருந்தில் வரும் போது வரணி சுட்டிபுரம் அம்மன் கோவிலடியில் பேருந்தை வழிமறித்த இளைஞர்கள் ஐந்து பேர் அந்த இளைஞனை பேருந்திலிருந்து இறக்கி வாளால் வெட்டியதில் கைவிரல் இரண்டு துண்டாடிய நிலையில் வலக்காலிலும் வாள் வெட்டுக்கு இலக்கான நிலையில் மந்துவிலுக்கு செல்லும் பாரதி வீதி சந்தியில் போட்டுவிட்டு சென்றுள்ளனர்

தகவல் அறிந்து வந்த தந்தை முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தனது மகனை மயங்கிய நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Previous Post Next Post


Put your ad code here