ஊடகவியலாளர்களுக்கான கடற் சுற்றுலா..!!!


கடற்படை தலைமையகத்தினால் ஊடகவியலாளர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட. கடற்சுற்றுலா இன்று 20.09.2020 காலை 8.30 மணிக்கு கட்டளைத்தளபதி தலைமையில் இடம்பெற்றது.

காங்கேசன்துறை கடற்தளத்திலிருந்து வடமராட்சி கிழக்குக் கடற்பரப்பு வரை இடம்பெற்ற இச் சுற்றுலாவில் வடமாகாணத்தைச் சேர்ந்த. பல்வேறு ஊடகநிறுவனங்களில் பணிபுரியும் ஊடகவியலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் பங்குகொண்டனர். இது குறித்து பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கையில் மக்களுடானான உறவுநிலைத் தொடர்பாடல் சார்ந்தே இத் திட்டம் அமைந்துள்ளது. இதுவரையில் மருத்துவத்துறை சார்ந்தோர். யாழ். மாவட்ட செயலகம் மாணவர்கள் பல்வேறு தரப்பினரும் பங்கு பற்றியுள்ளனர் எனத் தெரிவித்தார்.

இக் கடற்பரப்பில் தினமும் யாரோ ஒருவர் கைது செய்யப்படும் நிலை ஏற்படுகின்றது. யாழ்மாவட்டம் கல்வி கலை கலாசாரம் பண்பாடு ரீதியாக மேல் நிலையில் உள்ள போதும் தற்போது கஞ்சா போன்ற பாவனைகள் கடத்தல்கள் இக் கடற்பரப்பினூடாக அதிகரித்துள்ளது. முதியவர்களை விட இளைஞர்களே அதிகம் பாவனையில் உள்ளனர் என்ற தகவலையும் இந்த பயணத்தில் அறிய முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.தர்மினி.

 























 

Previous Post Next Post


Put your ad code here