கற்காமல் இருப்பதைவிட பிறக்காமல் இருப்பதே நல்லது; ஏனெனில் அறியாமைதான் தீவினையின் மூலவேர்! - பிளேட்டோ..!!!


“ கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே”இந்த வாக்கினை கேட்டிருப்பேன். ஆனால்அன்றுதான் கண்கூடாக அறிந்துகொண்டேன். கிளி/வினாசியோடை மகாவித்தியாலயம் பூநகரியில்அமைந்துள்ளது. 150 வரையான மாணவர்களை தன்னகத்தே கொண்ட திறம்பட மிளிரும் பாடசாலை அது. உயர்தர மாணவர்களின் ஒன்றுகூடல் நிகழ்வொன்றுக்காய் solve நிறுவனத்தின் சார்பில் நானும் எனதுகுழுவினரும் சென்றிருந்தோம் என solve நிறுவன ஸ்தாபகர் திருமதி பவதாரணி ராஜசிங்கம் தெரிவித்ததார்.

தொடர்ந்து பேசுகையில் அந்த மாணவச் செல்வங்கள் குரல் என் காதுகளில் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கிறது .அத்தனை மகிழ்வோடு வரவேற்றார்கள். நிகழ்வின் தொடக்கத்தில் பேசிய அதிபரின் வார்த்தைகளில் அத்தனை ஆதங்கம். பின்தங்கிய பிரதேசம் தான்  ஆனால் எங்கள் மாணவர்கள் கல்வியில் ஒழுக்கத்தில் திறமையில் எதிலுமே யாருக்கும் பின்தங்கியவர்கள் இல்லை. இதுவரையில் உயர்தர பிரிவென்பது எம்மிடமில்லை. இன்று முதல் முறையாக அதனை ஆரம்பித்துவைத்து வழியனுப்பி புதியவர்களை வரவேற்கிறோம். இனிவரும் காலங்களில் எல்லாவற்றையும் தாண்டி முன்னே தொடர்வோம். குழந்தை தவழும் பருவத்தில் நாங்கள் இருக்கிறோம் . தவழும் குழந்தை நிச்சயம் நிற்கும்,நடக்கும், ஓடும் இதற்கு  தனது ஆசிரியர்களும் இந்த மாணவர்களும் உறுதுணையாய் இருப்பார்கள் என தெரிவித்திருந்தார்.

பிரியாவிடையை எதிர்நோக்கியிருந்த மாணவர்கள் இதயம் கலங்கியிருந்தார்கள். தமக்கான சாம்ராஜ்யத்திலிருந்து கடத்தப்பட்டே ஆகவேண்டியவர்கள்தானே பாடசாலையை கடந்துவந்த அத்தனைமாணவர்களும். இந்த மாணவர்களும் அப்படித்தான். எண்ணப்பகிர்வுகளை அவர்கள் பகிர்ந்த போது சிலிர்ப்பாகவும், சிந்திப்பதாகவும், சில எம்மை காலத்தை மீட்டு சிரிக்கவும் வைத்தன.

அதில் ஒரு மாணவி தன் கல்வி கற்க வினாசியோடை மகாவித்தியாலயத்திற்கு தனது எட்டு வயதில் வந்ததாகவும் அந்த காலத்தில் இந்த இடம் பாடசாலைதான் என்பதற்கான எந்த அறிகுறியும் அற்றதாய் இருந்தது என்றார். பாடசாலை சீருடைகள் இல்லை. கட்டாந்தரையில் இருந்து படித்து பின்னர் பாய்விரித்து படித்து அதன் பின்னர்கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு ஆசிரிய, சமூக செயற்பாட்டாளர்களுனால் இன்று இந்த நிலைக்குவந்துள்ளது. எமது தம்பி தங்கைகள் இங்கே உள்ளனர்.ஆனால் இன்னும் இங்கே வளர்ச்சி தேவைப்படுகிறதுஎன்றார்.

இன்னுமொரு மாணவி நிச்சயமாய் எனது பாடசாலைக்கு நான் நற்பெயர் பெற்று தருவேன் நல்ல வேலைக்குசெல்வேன் என்று உறுதிகூறினார். 

எத்தனையோ வசதிகள் இருந்தும் நாம் கற்றலை தொலைக்கிறோம். ஆனால் இங்கு மிக மிக குறைந்தவசதிகளில் இந்த சிறார்கள் ஆர்வமுடன் கற்றலை தேடுகிறார்கள். தொடரந்தும் solve இவர்களுடன் பயணிக்கும். 









Previous Post Next Post


Put your ad code here