செய்தியாளர்களை அவமதிக்கும் விதமாக யாழ் பல்கலைகழக துணைவேந்தர் சி.சிறீசற்குணராஜா இன்று யாழ் பல்கலைகழகத்தில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் நடந்து கொண்டார்.
பல்கலைகழகத்தில் பகிடிவதை தறிகெட்டு நடக்கும் நிலையில் ஊடகங்கள் அதை வெளிச்சமிட்ட பின்னர் இன்று அவசர அவசரமாக கூடி, அது தொடர்பாக நடவடிக்கையெடுப்பதாக துணைவேந்தர் தெரிவித்தார்.
இதன்போது செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பியபோது, கேள்வி வேண்டாம். அதை பிறகு கேட்பம். மீடியா வந்து, இதுதான் உங்களில உள்ள பிரச்சனை. இது பிறீபிட். ஓகே. இது துணைவேந்தர்.. செரிமோனியல் மாதிரி. எச்.ஈயோட கதைக்கிறத போலத்தான் என்னோட கதைக்கலாம். அங்க நீங்கள் கேள்வி கேட்கேலாது தெரியும்தானே. டெனால்ட் ரம்பிடம் கேள்வி கேட்தாலதான் மீடியா இதையே நிற்பாட்டினவர்“ என்று ஊடகவியளாலர்களுக்கு துணைவேந்தர் சுட்டிக்காட்டினார்.