நாடளாவிய ரீதியில் உள்ள சகல முன்பள்ளிகளுக்கும் நாளையும் (05) முதல் விடுமுறை வழங்குவதற்கு மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி, ஆரம்பக் கல்வி இராஜாங்க அமைச்சு தீர்மானித்துள்ளது.
மேலும், நாடளாவிய ரீதியில் உள்ள அரச பாடசாலைகளுக்கும் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்குமான 2 ஆம் தவணைக்கான விடுமுறை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (09) முதல் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
திவுலபிடிய பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,395 ஆக அதிகரித்துள்ளமையே இதற்கு காரணமாகும்.
இந்நிலையில், திவுலபிடிய மற்றும் மினுவங்கொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Tags:
sri lanka news