நாடாளுமன்ற ஊழியர் ஒருவரின் உறவினருக்கு கொரோனா..!!!


பத்தரமுல்லை, பெலவத்தை பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான சேவைப் பிரிவு ஊழியர் ஒருவரின் உறவினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இதனைக் குறிப்பிட்டார்.

அத்தியவசிய தேவையொன்றுக்காக, தான் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான சேவைப் பிரிவுக்கு விஜயம் செய்தபோது, தன்னை அனுமதிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், கொரோனா அச்ச நிலைமையை கருத்திற் கொண்டு, அங்கு பிரவேசிப்பதற்கு ஏதேனும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளனவா என நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதன்படி, குறித்த கேள்விக்கு பதிலளித்த போதே, நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான சேவைப் பிரிவு ஊழியர் ஒருவரின் உறவினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார்.

இந்த நிலைமையை கருத்திற் கொண்டே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்நுழைவதை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மேலும் கூறினார்
Previous Post Next Post


Put your ad code here