நாட்டில் மேலும் 274 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டில் ஜனவரி முதல் 10 மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
அவர்களில் மினுவாங்கொட – பேலியகொட கொரோனா வைரஸ் கொத்தணி தொற்றாளர்களுடன் தொடர்புடைய 267 பேரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் கண்காணிக்கப்படுபவர்கள் 7 பேரும் அடங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மினுவாங்கொட – பேலியகொட கொரோனா பரவல் கொத்தணியை அடுத்து 8 ஆயிரத்து 550 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் நாட்டில் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 12 ஆயிரத்து 18 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Tags:
sri lanka news
