Tuesday 17 November 2020

இன்றைய ராசிபலன் - 17.11.2020..!!!

SHARE

மேஷம்

மேஷம்:  பிற்பகல் 12.21 மணி வரைசந்திராஷ்டமம் இருப்பதால்உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். பழையகசப்பான சம்பவங்களைப் பற்றியாரிடமும் விவாதிக்க வேண்டாம்.யோகா, தியானம் என மனம் செல்லும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதுநல்லது. மாலைப் பொழுதிலிருந்து தடைகள் நீங்கும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்:  கணவன்- மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும் புது நட்பு மலரும்.எதிர்பார்த்த வேலைகள் தடையின்றிமுடியும். வியாபாரத்தில் லாபம்வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். பிற்பகல் 12.21 மணி முதல் சந்திராஷ்டமம்தொடங்குவதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.


மிதுனம்

மிதுனம்:  சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். பிள்ளை களால் பெருமையடைவீர்கள். உதவிகேட்டு வருபவர்களுக்கு உங்களால் முடிந்தவற்றை செய்து கொடுப்பீர்கள். வியா பாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் புது முயற்சியை மேலதி
காரி பாராட்டுவார். தொட்டது துலங்கும் நாள்.


கடகம்

கடகம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வியாபாரத்
தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள் .


சிம்மம்

சிம்மம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். வியா
பாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


கன்னி

கன்னி: உங்கள் பேச்சில் அனுபவஅறிவு வெளிப்படும். உங்களிடம்பழகும் நண்பர்கள் உறவினர்களின்பலம் பலவீனத்தை உணர்வீர்கள்.சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும்நாள்.

துலாம்

துலாம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் உதவிக்கரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். உற்சாகமான நாள்.


விருச்சிகம்

விருச்சிகம்: பிற்பகல் 12. 21 மணிவரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் முன்கோபத்தை குறையுங்கள். திட்டமிடாத செலவினங்கள் உண்டாகும்.  மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். மாலையிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.


தனுசு

தனுசு: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். உறவினர் நண்பர்களுடன் விவாதம் வந்து போகும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். பிற்பகல் 12.21 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் நிதானித்து செயல்பட வேண்டிய நாள்.


மகரம்

மகரம்:  நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். சிறப்பான நாள்.


கும்பம்

கும்பம்: உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உடன்பிறப்புகள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.


மீனம்

மீனம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.  புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.  வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். சாதிக்கும் நாள்.
SHARE