கொவிட்–19: உலகின் மிகப்பெரிய கையுறை தொழிற்சாலைக்கு பூட்டு..!!!


உலகின் மிகப்பெரிய இரப்பர் கையுறை நிறுவனத்தில் பணி புரியும் சுமார் 2,500 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் அதன் பாதிக்கும் அதிகமான தொழிற்சாலைகள் மூடப்படவுள்ளன.

நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மலேசியாவின் டொப் கிளோ நிறுவனத்தின் 28 தொழிற்சாலைகள் மூடப்படும் என்று நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். கொரோனா பெரும் தொற்று ஏற்பட்டது தொடக்கம் இந்த கையுறைகளுக்கான கேள்வி உலகெங்கும் அதிகரித்துள்ளது.

எனினும் குறைந்த சம்பளத்தில் குடியேற்ற தொழிலாளர்கள் நிரம்பி இருக்கும் இந்தத் தொழிற்சாலைகளின் பணிச் சூழல் குறித்து கவலை வெளியாகியுள்ளது.

டொப் கிளோ தொழிற்சாலைகள் இருக்கும் பகுதிகளில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்திருப்பதாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த தொழிற்சாலைகளில் பணியாற்றும் சுமார் 5,800 ஊழியர்களிடம் செய்யப்பட்ட சோதனைகளில் 2,453 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகி இருப்பதாக அது தெரிவித்துள்ளது. டொப் கிளோ நிறுவனம் மலேசியாவில் 41 தொழிற்சாலைகளை கொண்டிருப்பதோடு அதில் பணியாற்றும் அதிகமான தொழிலாளர்கள் நேபாளத்தில் இருந்து வந்தவர்கள் என்பதோடு அவர்கள் நெரிசல் மிக்க குடியிருப்பு தொகுதிகளில் வாழ்கின்றனர்.

Previous Post Next Post


Put your ad code here