கண்டி நகர பகுதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்படவுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே அறிவித்துள்ளார்.
அதன்படி நாளை (வியாழக்கிழமை) தொடக்கம் டிசம்பர் 4ஆம் திகதி வரை கண்டி நகர பகுதியில் உள்ள 45 பாடசாலைகளை இவ்வாறு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
கண்டியில் கடந்த சில நாட்களாக சடுதியாக அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags:
sri lanka news