Sunday 15 November 2020

யாழ் மாவட்டத்தில் 600 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலில்..!!!

SHARE



யாழ் மாவட்டத்தில் தற்போது 600 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலில் உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் நேரடியாக தொடர்புபட்ட, தொற்றுக்குள்ளானவர்களுடன் பயணித்த சுமார் 600 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் நேற்று மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே தனிமைப்படுத்தலில் இருந்தவர் எனினும் அவருடன் நேரடியாக தொடர்புபட்டவர்களை தொடர்ச்சியாக தனிமைப்படுத்தி பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்வதற்கான நடவடிக்கையினை சுகாதாரப் பிரிவினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

யாழில் தொற்று சந்தேகத்தில் சுயதனிமைப்படுத்தப்படுபவர்கள் பிசிஆர் பரிசோதனையின் பின்னர் தனிமைப்படுத்தலிருந்து சுகாதாரபிரிவினரால் படிப்படியாக விடுவிக்கப்படுகிறார்கள்.
அத்துடன் ஏற்கனவே தொற்று அச்சம் காரணமாக முடக்கநிலையில் இருந்த மூன்று கிராமங்கள் விடுவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புகளைப் பேணிய சுமார் 600 குடும்பங்கள் இன்றைய புள்ளிவிவரத்தின்படி சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் ஏற்கனவே தனிமைப்படுத்தலில் இருந்தோரின் எண்ணிக்கையை விட சற்று குறைவாகவே காணப்படுகின்றது.

தற்போது இந்துக்களின் கந்தசஷ்டி விரதம் இடம்பெறுகின்றமையினால் ஆலயங்களில் ஆலய பூசகர் மற்றும் திருவிழா உபயதாரர் உட்பட ஐவர் மட்டுமே ஆலயத்துக்குள் செல்ல அனுமதிக்குமாறு ஏற்கனவே சுகாதாரப் பிரிவினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதற்கேற்பசெயற்பட வேண்டும்.
அத்துடன் யாழில் பொதுமக்கள் தொடர்ச்சியாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அநாவசியமற்ற பயணங்களை தவிர்த்து ஒன்றுகூடல்களையும் தவிர்ப்பதன் மூலமே யாழ்மாவட்டத்தில் தொற்று ஏற்படாதவதை கட்டுப்படுத்த முடியும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
SHARE