பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அண்மையில் வெளியிடப்பட்ட Z Score புள்ளியிடலின் அடிப்படையில் 2019 / 2020 கல்வியாண்டுக்காக விண்ணப்பித்த மாணவர்களுள், மேன்முறையீடு செய்ய விரும்பும் மாணவர்கள் யாராவது நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக மேன்முறையீட்டைத் தபால் மூலமாக அனுப்பமுடியாத நிலை இருப்பின், அந்த மேன்முறையீட்டுப்படிவத்தை உடனடியாக மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்குமாறும்,
ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில், ஊரடங்கு தளர்த்தப்பட்டு, நிலைமை சீரடைந்த பின்னர் பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்குமாறும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பதிவிறக்கம் செய்யப்பட்டு, பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பத்தின் பிரதியை appeals@ugc.ac.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு விண்ணப்பத்தின் மாதிரியைப் பின்வரும் இணைப்பினூடாகப் பதிவிறக்கம் செய்ய முடியும் :
https://ugc.ac.lk/downloads/admissions/Specimen%20application%20form%20for%20appeals/Specimen%20form%20for%20appeals%202019_20.pdf
Tags:
sri lanka news
