கம்பஹா, கெளனி – பெத்தியாகொட பிரதேசத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்து சென்றபோது கர்ப்பத்தில் இருந்த குழந்தையை இழந்த சோகச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கர்ப்பிணி பெண்ணின் கணவர் மீன் வியாபாரி என்பதால் அவர் மட்டக்களப்பு தனிமைப்படுத்தும் முகாமில் சேர்க்கப்பட்டார்.
இதனையடுத்து அவரது 6 மாத கர்ப்பிணியான மனைவி உட்பட குடும்பத்தினர் பதுளை – தியத்தலாவ இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
பயண தூரம் மற்றும் பல இன்னல்களினால் அவரது கர்ப்பத்தில் இருந்த குழந்தை இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
sri lanka news
