‘மாஸ்டர்’ பட டீசர் ரிலீஸ் – ரசிகர்கள் மகிழ்ச்சி..!!!


‘மாஸ்டர்’ திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மாஸ்டர்’.

அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், ஏப்ரல் மாதம் திரைக்கு வர வேண்டிய இத்திரைப்படம் கொரோனா ஊரடங்கால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.

இந்நிலையில் படம் குறித்த அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தீபாவளிக்கு டீசர் வெளியாகும் என்ற நல்ல செய்தியை சொன்ன படக்குழு தற்போது டீசரை வெளியிட்டுள்ளது.

இதனால் மகிழ்ச்சியடைந்திருக்கும் ரசிகர்கள் டீசர் வெளியாவதற்கு முன்பே #mastarteaser என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர்.

டீசரில் விஜய் ஜேடி என்ற பேராசியர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது உறுதியாகியுள்ளது.

மேலும் விஜய் படத்துக்கே உரித்தான ஸ்டைலான காட்சிகள் டீசரில் இடம்பெற்றிருப்பதால் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
விஜய் சேதுபதியுடன் நேருக்கு நேர் விஜய் மோதுவது போன்ற காட்சியுடன் டீசர் நிறைவடைந்திருப்பதால் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

நவம்பர் 10 ஆம் திகதி முதல் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் 50% இருக்கைகளுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான ‘மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி கிடைத்தால் திரைக்கு வர வாய்ப்பிருக்கிறது என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

Previous Post Next Post


Put your ad code here