நீல நிறத்திலான குழந்தைகள் இலங்கையில் பிறந்திருப்பதாக நாடாளுமன்றத்தில் இன்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற குழுநிலைவிவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இந்த தகவலை வெளியிட்டார்.
யூரியா அதிகமாக பயன்படுத்தியமை மற்றும் இரசாயன உரங்களை பயன்படுத்தியதால் புத்தளம் மாவட்டத்தில் நுரைச்சோலை பகுதிகளில் இவ்வாறு நீல நிறத்திலான குழந்தைகள் பிறந்திருப்பதாகவும், தாம் அங்கு சென்று பார்வையிட்டபடியினால் சபையில் அதனை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
Tags:
sri lanka news