Sunday 29 November 2020

மடுவில் ஒருவருக்கும் கிளிநொச்சியில் ஒருவருக்கும் கொரோனா தொற்று..!!!

SHARE
வடக்கு மாகாணத்தில் மன்னார், மடு மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் கிளிநொச்சியில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 5 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் மடு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவரிடம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து மடுவுக்கு வருகை தந்த 25 வயதுடைய ஒருவர் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தா். சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டார். அவருக்கு கோரோனா தொற்ற உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டது.

அத்துடன், கிளிநொச்சி கண்டாவளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் வீதித் திருத்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒருவருக்கும் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

தென்னிலங்கையைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர் கடந்த ஒரு வாரமாக கண்டவளையில் அவர் பணியாற்றிய இடத்தில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

அத்துடன், முசலியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிலாபத்திலிருந்து கடற்தொழிலில் ஈடுபடுவதற்காக மன்னார் முசலிக்கு வந்திருந்த நிலையில் 33, 37 மற்றும் 57 வயதுடையவர்கள் கடந்த 11 நாள்களாக சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் மூவருக்கும் இன்று கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

SHARE