கொவிட் -19 நோய்த் தொற்றுக்குள்ளான 29 வயதுடைய பெண், 4 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
டி சோய்சா பெண்கள் மருத்துவமனையில் இன்று அந்தப் பெண்ணுக்கு 4 குழந்தைகளும் பிறந்துள்ளன.
மருதானை குப்பியாவத்தயில் வசிக்கும் பெண், இன்று காலை இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார் என்று டி சொய்சா குழந்தைகள் மருத்துவமனை பணிப்பாளர், மருத்துவர் சாகரி கிரிவண்டேனிய தெரிவித்தார்.
நான்கு குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கப்படுகின்றன.
Tags:
sri lanka news