யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை சரிவு..!!!


யாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று திங்கட்கிழமை   94 ஆயிரத்து 600 ரூபாயாகக் குறைவடைந்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் முதல் குறையத் தொடங்கிய தங்கத்தின் விலை, நவம்பர் மாதத்தில் ஆதாலபாதாளத்திற்கு சென்றது.

கோரோனா வைரஸ் தொற்றின் தொடக்கத்தில் வரலாறு காணாத உயரத்திற்குச் சென்ற தங்கத்தின் விலையானது, நவம்பர் மாதத்தில் விலை வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. வல்லரசு நாடுகளின் பொருளாதார சிக்கலைத் தீர்ப்பதற்காக உலக நாடுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருவதும், பொருளாதார மந்த நிலையும்தான் வீழ்ச்சிக்குக் காரணம் என பொருளியல் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

முதலீட்டாளர்கள் இடையே இந்த விலை வீழ்ச்சி பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் மாத இறுதிவரை குறைந்து கொண்டே இருந்த தங்கத்தின் விலையானது, உயர ஆரம்பித்தது, ஆனால் தொடர் ஏற்றத்திற்குப் பின் இன்று மீண்டும் சரியத் தொடங்கியுள்ளது.

இன்று 22 கரட் ஆபரணத்தங்கத்தின் விலை பவுணுக்கு 2 ஆயிரத்து 100 ரூபாய் குறைந்து, 94 ஆயிரத்து 600 ரூபாய்க்கு காணப்படுகிறது.

இன்று 24 கரட் தூய தங்கத்தின் விலை பவுணுக்கு 2 ஆயிரத்து 300 ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அதேபோன்று 21 கரட் தங்கத்தின் விலை 90 ஆயிரத்து 300 ரூபாயும் 20 கரட் தங்கத்தின் விலை 86 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Previous Post Next Post


Put your ad code here