யாழ்.கல்வி வலய பாடசாலைகள் ஒரு வாரகாலத்திற்கு மூடப்பட்டிருக்கும் நிலையில் இரு பாடசாலைகளில் பரீட்சைகள் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது. என பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் கூறிவருகின்றனர்.
யாழ்.மாநகரம் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் யாழ்.கல்வி வலய பாடசாலைகள் அனைத்தும் ஒரு வாரகாலத்திற்கு முடக்கப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் இரு பாடசாலைகளில் மட்டும் தொண்டமனாறு வெளிக்கள நிலையத்தின் பரீட்சைகள் நடத்தப்பட்டிருக்கின்றது. இது குறித்து ஊடகவியலாளர்கள் பொறுப்புவாய்ந்த கல்வி அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள் மற்றும் மாவட்ட செயலக நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது ஒருவருக்கொருவர் தமக்கு அவ்வாறான விடயம் தெரியாது. என கூறியதுடன், பின்னர் பரீட்சைகளை நிறுத்துமாறு பணிக்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கின்றனர்.