மீசாலையில் ரயில் மோதி குடும்பஸ்தர் பலி..!!!


மீசாலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ரயில் கடவையில் குடும்பஸ்தர் ஒருவர் ரயில் மோதியதில் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று புதன்கிழமை  இரவு 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ரயில் கடவைக் காப்பாளராக இருந்த இளைஞனுக்கு பேச்சுத் துணைக்கு நின்ற நபரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த ரயில் மீசாலை ரயில் நிலையத்தை அண்மித்த போது கடவைக் காப்பாளர் வீதியில் பாதை தடையை ஏற்படுத்தி விட்டு வீதியின் மறுபக்கம் நின்றதாகவும், ரயில் வருவதனை அறியாத குறித்த நபர் காப்பாளர் நின்ற பக்கமாக கடவையைக் கடக்கும் போது ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கார்த்திகேசு வீதி மீசாலை மேற்கைச் சேர்ந்த 60 வயதான பொன்னர் செல்வராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post Next Post


Put your ad code here