அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட திருநெல்வேலி பாரதிபுரம் நாளை காலை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட உள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க மகேசன் தெரிவித்த இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
கடந்த வாரமளவில் திருநெல்வேலியில் முடக்கப்பட்ட பாற்பண்ணை கிராமத்தில் ஒரு பகுதியினை தவிர்ந்த ஏனைய பகுதியினை விடுவித்திருந்தோம்
கடந்த 28 நாட்களாக கண்காணிப்பு வலயமாக உள்ள திருநெல்வேலி பாரதிபுரம் கிராமம் நாளை காலையில் இருந்து விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர்கள் எடுத்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்
அங்கு நேற்று 97 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பி சிஆர் பரிசோதனைகளில் மூன்று நபர்களுக்கு மாத்திரமே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பபட்டுள்ளது
ஏனையோருக்கு தொற்றி ல்லை அந்த நிலைமை திருப்தியாக உள்ளதன் காரணமாக நாளைய தினம் திருநெல்வேலி பாரதிபுரம் கிராமம் நாளைய தினம் கண்காணிப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கஉரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
