மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை(25) மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சாரசபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி , நாளை காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ். திருநெல்வேலிச் சந்தை, வெளிவாரிப் பட்டப்படிப்புக்கள் நிலையம், திண்ணை விடுதி, மருத்துவமனை வீதி, கச்சேரி நல்லூர் வீதிச் சந்தி, முலவை, மின்சாரசபை பிரதிப் பொதுமுகாமையாளர் அலுவலகம், ஆளுநர் விடுதி, யாழ்.மாவட்டச் செயலகம், துளசி மஹால், யு. எஸ்.விடுதி, அம்மன் வீதி- கந்தர்மடம், ஆரியகுளம்- பருத்தித்துறை வீதி, இலுப்பையடிச் சந்தி, பலாலி வீதியில் பிஸா கட் மற்றும் ஐபிசி தமிழ், ஆனைப்பந்தி, பலாலி வீதி சிவராஜா அவென்யூ, பலாலி வீதி யாழ்.மருத்துவமனை, பி.சி. சி. ஏ. எஸ் கல்லுரி, பலாலி வீதி சிவன்- அம்மன் வீதிச் சந்தி, அவுனோர் (பிவிரி) லிமிற்ரெட், தம்றோ, நொதேர்ன் மருத்துவமனை, சூரிய உதயம் (வீனஸ் வைத்தியசாலை), பலாலி வீதி கொமர்ஷல் வங்கி, பனிக்கர் லேன் சந்தி ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
