கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்பில் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று தேவாலயங்களில் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைகார்களின் குண்டுத்தாக்குதலில் படுகொலைசெய்யப்பட்ட கத்தோலிக்கமக்களின் ஆத்மாசாந்தியடையவேண்டி இரண்டு; ஆண்டு பூர்த்தி நினைவேந்தல் நிகழ்வு இன்று வரலாற்று சிறப்பு மிக்க யாழ் மரியன்னை பேராலயத்திலும் இடம்பெற்றது.
8.45 காலை தேவாலய மணி ஒலிக்கவிடப்பட்டதுடன் பிரதான சுடரேற்றி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.கத்தோலிக்க மக்கள்,பங்குகுருநிலை முதல்வர்கள்,அருட்சகோதர்கள், அருட்சகோதரிகள், மாணவ,மாணவிகளும் மெழுகுவர்த்தி எற்றி ஆத்மாசாந்தி அடையவேண்டி பிராத்தனை செய்யப்பட்டது
இவ் ஆத்மாசாந்தி அடையவேண்டிய திருப்பலியான அஞ்சலியை யாழ் மறைமாவட்ட பங்கு குருமுதல்வர் கலாநிதி ஜெயரட்ணம் அடியார்கள் நிகழ்த்திவைத்தார்.
இதில் யாழ் மாநகரசபையின் முதல்வர் வி.மணிவண்ணன் உள்ளிட்ட சபை உறுப்பினர்கள்,கத்தோலிக்க மக்கள் பங்குகுருநிலை முதல்வர்கள்,அருட்சகோதர்கள், அருட்சகோதரிகள், மாணவ,மாணவிகளும் கலந்துகொண்டனர்.
உயிர்த்தஞாயிறு அன்று மறைந்த கத்தோலிக்க மக்களின் வேண்டுதலின் ஆன தேவைகளும்,நீதியும் உரிய வகையில் கிடைக்கவேண்டும் என கருப்பொருளிலான சிறப்புரைகள் நிகழ்த்தப்பட்டன.




















