யாழ்ப்பாண மாவட்ட எழுத்தாளர் சங்கம் அங்குரார்ப்பணம்..!!!


தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் கீழ் மாவட்ட கலாசார திணைக்களத்தினரால் யாழ்ப்பாண மாவட்ட எழுத்தாளர் அமைப்பினை உருவாக்குதல் தொடர்பான அங்குரார்ப்பண நிகழ்வு அரசாங்க அதிபர் திரு. க. மகேசன் அவர்களின் தலைமையில் இன்று (23) காலை 10 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தில் பத்தொன்பது பதிவுசெய்யப்பட்ட எழுத்தாளர் சங்கங்கள் காணப்படுகின்றன. எழுத்தாளர்களிற்கு அரசாங்கத்தினால் பல்வேறு கௌரவங்கள் வழங்கப்படுகிறது. இச் சந்தர்ப்பத்தில் உங்கள் அனைவரையும் வரவேற்று இவ் ஆண்டுக்கான புதிய நிர்வாகத்தினை தெரிவு செய்து எதிர்காலத்திலும் சிறந்த படைப்புக்களை உருவாக்கவும் எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந் நிகழ்வில் எழுத்தாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், குறிப்பாக நூல்களை வெளியிடுதல், விற்பனை செய்தல் மற்றும் ஊக்கப்படிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. ம. பிரதீபன், வாழ்நாள் பேராசிரியர் திரு.அ. சண்முகதாஸ் மற்றும் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்கள், பிரதேச மட்ட எழுத்தாளர் சங்க பிரதிநிதிகள், எழுத்தாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.















Previous Post Next Post


Put your ad code here