நாட்டில் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
இதன்படி, மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ளை, கலேவெல, மாத்தளை மற்றும் நாவுல பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குருநாகல் மாவட்டத்தின் பன்னல பொலிஸ் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
மேலும் குருநாகல் மாவட்டத்தின் உடபேத்தவ மற்றும் கலமுன கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும், மொனராகலை மாவட்டத்தின் சியம்பலாண்டுவ மற்றும் ஹெலமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
Tags:
sri lanka news
