கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கழிவறையிலிருந்து 26 கிலோ தங்கத்துடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி 31.7 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது, விமான நிலைய ஊழியர் ஒருவரும், பயணியொருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அதன்விளைவாக, இன்று கத்தார் தோஹா விமான நிலையத்திலிருந்து பயணி ஒருவரால் விமான நிலைய கழிவறையில் வைத்து, விமான நிலைய பராமரிப்பு ஊழியர் ஒருவருக்கு கைமாற்றப்பட்ட தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபரான விமான நிலைய பணியாளர் தனது உடலில் மறைத்து வைத்து, விமான நிலையத்திலிருந்து வெளியேறத் தயாரான போது, சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்கப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
Tags:
sri lanka news
