யாழ்ப்பாணம் - மயிலிட்டி துறைமுகம் இலங்கையிலுள்ள மீன்பிடி துறைமுகங்களில் முதன்மையானதாக திகழ்ந்தது என்று சொல்வதை தவறு என்று சொல்ல முடியாது. காலி துறைமுகம் இலங்கை அரசாங்கத்தால் அபிவிருத்தி செய்யப்படுவதற்கு முன்னர் மயிலிட்டி துறைமுகம் தான் இலங்கையிலுள்ள மீன்பிடி துறைமுகங்களில் முதன்மையானதாக திகழ்ந்தது.
1983க்கு முன்னர் மயிலிட்டிகிராமத்தில் வாழ்ந்த மீனவக்குடும்பங்களின் எண்ணிக்கை சுமார் 1100. மயிலிட்டி துறைமுகத்தில் 1983க்கு முன்னர் ஆயிரத்திற்கு மேற்பட்ட கண்ணாடி இழைப் படகுகளும் டீசல் இயந்திரம் பொருத்தப்பட்ட பாரிய படகுகளும் நங்கூரமிட்டிருக்கும். இலங்கை அரசாங்கம் காலி துறைமுகத்தை அபிவிருத்தி செய்த பின்னரும் மயிலிட்டி துறைமுகம் இலங்கையில் இரண்டாவது பெரிய மீன்பிடி துறைமுகமாகவும் வடபகுதியில் முதன்மையான மீன்பிடி துறைமுகமாகவும் விளங்கியது.
