யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி மாணவன் சிறிகாந்தன் பிரசாந் அண்மையில் வெளியாகிய க.பொ.த உயர்தர பரீட்சையில் 3A பெறுபேறுகளைப் பெற்று பாடசாலை சமூகத்திற்கும் கல்விச் சமூகத்திற்கும் பெருமையைத் தேடிக் கொடுத்துள்ளார்.
வர்த்தகப் பிரிவில் தேசிய மட்டத்தில் ஐந்தாம் இடத்தையும் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் பெற்றுக்கொண்ட இவர் பாடசாலையில் மாணவத் தலைவனாகவும் சாரணியம் கிரிக்கட் மற்றும் ஏனைய விளையாட்டுத் துறைகளிலும் செயற்பட்டு வந்ததுடன் சமூக சிந்தனை கொண்ட இளைஞனாகவும் செயற்பட்டு வருகின்றார்.
இவர் தன்னுடைய பெறுபேறு குறித்து கருத்துத் தெரிவிக்கையில்
""மிகவும் கஸ்டப்பட்டு தேடல் ஆர்வத்துடன் ஒரு மனநிலையோடு கல்வி கற்றால் எப்போதும் வெற்றி கிடைக்கும். குழுவாக நண்பர்களுடன் சேர்ந்து கலந்துரையாடி படிப்பதுடன் ஆளுக்கு ஆள் படிப்பித்தும் படித்தோம். நண்பர்களுக்கும் நல்ல பெறுபேறுகள் கிடைத்துள்ளது. படிப்பு என்று மட்டுமில்லாமல் ஆளுமையை தரக்கூடிய விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். சிறு வயதுக் கல்வி தொடக்கம் இன்றை வரை என்னுடைய கல்விச் செயற்பாட்டில் அக்கறைகொண்ட அனைத்து ஆசிரியர்கறையும் இத் தருணத்தில் நினைத்து பெருமை கொள்கின்றேன்.நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன் . என் கல்வி வளர்ச்சியில் அனைத்து வளங்களையும் தடையின்றி வழங்கி உதவிய குடும்பத்தினர் கொரோணா கால சூழலிலும் தடையின்றிய கல்விக்கான வளங்களை தந்தனர். வகுப்பு வகுப்பு என்று நேரத்தை விரயம் செய்து வெளியில் அல்லல் படாமல் நாம் தேடிப் படிக்கவும் பொறுமையாக வீட்டில் இருந்து படிக்கவும் கொரோணா காலம் மிக உதவியாக இருந்துள்ளது என்றார்.இவர் உரும்பிராயைச் சேர்ந்த. திரு திருமதி சிறிகாந்தன் பரமேஸ்வரி தம்பதிகளின் ஏக புதல்வன் என்பதும் குறிப்பிடத்தகக்கது.
யாழ்.தர்மினி.


