யாழ்.கச்சேரியடியில் 4 மாத குழந்தை திடீரென உயிரிழப்பு..!!!


யாழ்ப்பாணம் கச்சேரியடியைச் சேர்ந்த 4 மாதக் குழந்தை ஒன்று அதிகாலை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

யாழ்ப்பாணம் கச்சேரி வீதியில் வசிக்கும் தாயார் ஒருவருக்கு கடந்த 4 மாதங்களிற்கு முன்னர் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.

இவர்களை வழமைபோன்று அதிகாலை 12 மணியை தாண் டிய நிலையில் பால் ஊட்டி தாயார் நித்திரையாக்கினார்.

அதிகாலை ஒரு குழந்தையின் அசைவைக் காணாது பதற்றத்துடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற சமயம் குழந்தை உயிரிழந்திருந்ததை மருத்துவர் உறுதி செய்தார்.

பிரதீப் ஹரீனா என்ற நான்கு மாதக் குழந் தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த குழந்தையின் மரண விசாரணையை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் பிரேத பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

Previous Post Next Post


Put your ad code here