யாழில். பயணத்தடை அமுலில் உள்ள போது, பூஜை வழிபாட்டில் ஈடுபட்டவர்கள் கைது..!!!


யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பூசகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொடிகாமம் வரணி வடக்கு பகுதியில் உள்ள ஆலயத்தில் முழுநேர பயண தடை அமுலில் இருக்கும்போது பூஜை வழிபாடுகள் இடம்பெறுவதாக கொடிகாம பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஆலயத்துக்கு சென்ற பொலிஸார் பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பூசகர் உள்ளிட்ட மூவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் கடுமையாக எச்சரித்து , பொலிஸ் பிணையில் விடுவித்தனர்.

Previous Post Next Post


Put your ad code here