நயினை நாகபூசணி அம்மன் ஆலயக் குருக்களும் கொரோனாவால் மரணம்..!!!


கொரோனாத் தொற்றுக்குள்ளான யாழ்ப்பாணத்தின் மற்றுமொரு பிரபலமான இந்துமதக் குருக்கள் உயிரிழந்துள்ளார்.

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயம் மற்றும் சுதுமலை புவனேஸ்வரி அம்மன் ஆலயம் ஆகியவற்றின் பிரதம குருக்களும் சர்வதேச இந்துமத குருபீடாதிபதியுமான சிவஸ்ரீ சம்பு மஹேஸ்வரக் குருக்கள் இன்று அதிகாலை உயிரிழந்திருந்தார்.

அவரின் மரணம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் இணுவில் கந்தசுவாமி கோவிலின் பிரதம குருக்களும் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்திருந்தமை தெரிந்ததே.

இன்று யாழ்ப்பாணத்தில் இருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post


Put your ad code here