காரைநகரில் பனை மரம் முறிந்து விழுந்து சிறுமி படுகாயம்..!!!


தற்பொழுது வட பகுதியில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவி வரும் நிலையில் காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட J/48 கிராம சேவகர் பிரிவில் வீசிய கடும் சுழல் காற்றினால் இன்று மாலை பனை மரம் முறிந்து வீட்டுக்கு மேல் விழுந்த நிலையில் வீட்டில் இரண்டரை சிறுமி படுகாயமடைந்து சங்கானை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார்

வீட்டில் மூவர் வசித்து வரும் நிலையில் இருவர் வீட்டுக்கு வெளியில் நின்றதன் அதன் காரணமாக உயிர் ஆபத்துக தவிர்க்கப்பட்டுள்ளது..வீடு பலத்த சேதமடைந்துள்ளது குறித்த விடயம் தொடர்பில் காரைநகர் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் குறித்த பனையை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here