பயணத் தடை வேளையில் யாழ் நகரில் விற்பனை நிலையமொன்றில் திருட்டு முயற்சி: இருவர் கைது..!!!


பயணத் தடை வேளையில் யாழ் நகரில் இயங்கும் பிரபல மோட்டார் சைக்கிள் உதிரிபாகங்கள் விற்பனை நிலையத்தில் திருட முயன்றவர்கள் பொலிசாரை கண்டதும் தப்பி ஓடும் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் நகரில்  இயங்கும் பிரபல  மோட்டார் சைக்கிள்  உதிரிபாகங்கள் விற்பனை நிலையத்தின்

பின்பகுதியினால் இறங்கி தண்ணீர்மோட்டரையும் வாகன உதிரிபாகங்களையும் திருடும் பொழுது யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயற்படும் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் படி பயணத்தடை வேளையில் மூடப்பட்டிருந்த கடையின் பின்புறமாக இறங்கி திருட்டில் ஈடுபட முயன்ற குற்றச்சாட்டில் பொற்பதி, நாவாந்துறையை சேர்ந்த இருவர் பொலீசாரை கண்டு ஓடும்பொழுது மாவட்ட குற்ற தடுப்பு பிரிவினரால் மடக்கிபிடிக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் யாழ்மாவட்ட குற்றதடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணையினை மேற்கொண்டுள்ளனர்.

Previous Post Next Post


Put your ad code here