நல்லூர், அரசடி பகுதியை முடக்க சுகாதாரப் பிரிவு தீர்மானம்..!!!


யாழ்ப்பாணம் - நல்லூர், அரசடி பகுதியை  முடக்குவதற்கு சுகாதாரப் பிரிவினர் அரச அதிபருக்கு சிபார்சு செய்துள்ளது .

நல்லூர் பிரதேசசெயலர் பிரிவுக்குட்பட்ட  ஜே/103(அரசடி) கிராம அலுவலர் பிரிவில் ஒரு பகுதியினை   முடக்குவதற்கு யாழ்ப்பாண மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் மாகாண சுகாதார பணிப்பாளரிடம் கோரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது

200 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் குறித்த பகுதியில் கடந்த ஒரு வார காலமாக 22 பேர்  அந்த பகுதியில்  தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதன் காரணமாக குறித்த அரசடி பகுதியினை முடக்குவதற்கு யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் மாகாண சுகாதார பணிப்பாளர் அரச அதிபர் ,யாழ் பாதுகாப்பு படை தளபதி ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அரசடிப்பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் சுகாதார நடைமுறைகளை மீறி  தேர் உற்சவம் இடம்பெற்ற பின்னர் அந்தப் பகுதியில் அதிகளவில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..

Previous Post Next Post


Put your ad code here