குழந்தை பிரசவித்த தாய் உயிரிழப்பு யாழ்.போதனாவில் சம்பவம்..!!!


யாழ்.போதனா வைத்தியசாலையில் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட தாய் ஒருவர் குழந்தை பெற்று சில மணி நேரங்களில் உயிரிழந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் தெல்லிப்பழையை சேர்ந்த ஜீவசுமன் மேரிசலுஜா (வயது-29) என்ற இளம் தாயே உயிரிழந்தவராவார்.

இருதய நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 2ஆவது குழந்தையாக ஆண் குழந்தை ஒன்றை பிரசவித்த நிலையில் திடீர் சுகயீனமடைந்துள்ளார்.

உடனடியாக அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு வைத்தியர்கள் தீவிர முயற்சி செய்தபோதும் அவர் உயிரிழந்துள்ளார்.

Previous Post Next Post


Put your ad code here