நல்லூர் பின் வீதியில் உள்ள மாநகர சபை காணிக்கு முட்கம்பி வேலி..!!!


யாழ்.மாநகர சபையின் அனுமதி பெறப்படாமல் , அதன் ஆதனத்திற்குள் அத்துமீறி நடைபெறும் செயற்பாடுகளை தவிர்க்கும் நோக்குடன் குறித்த ஆதனம் அறிக்கைப்படுத்தப்பட்டுள்ளது.

நல்லூர் ஆலய பின் பகுதியில் பருத்தித்துறை வீதியில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான ஆதனம் காணப்படுகின்றது.

குறித்த ஆதனம் இதுவரை காலமும் அறிக்கையிடப்படாமல் திறந்த வெளியாக காணப்பட்டன. அப்பகுதியில் சில வர்த்தக நிறுவனங்கள் மாநகர சபை அனுமதியுடன் உரிய குத்தகை பணம் செலுத்தி தமது பொருட்களின் வியாபார மற்றும் விளம்பர நோக்கங்களுக்கு பயன்படுத்தினர்.

இதேவேளை சிலர் அவ்வாதனத்திற்குள் அத்துமீறி செயற்பட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த ஆதனத்தை அறிக்கைப்படுத்தி பாதுகாக்கும் நோக்குடன் மாநகர சபை அனுமதியின்றி எவரும் உட்செல்ல முடியாதவாறு  ஆதனத்தை சூழ முட்கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. 










Previous Post Next Post


Put your ad code here