“எம்மை எல்லாம் வாழ வைக்கும் தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்துக்கள்” - அங்கஜன் எம்.பி..!!!


உலக பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப இரத்தமும், வேர்வையும் சிந்தும் தொழிலாளர்களுடைய கை ஓங்கட்டும் என பாராளுமன்ற உறுப்பினரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் வாழ்த்தியுள்ளார்.

தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும்;

அநீதிகளுக்கும் அடக்குமுறைகளுக்கெதிராகவும் முன்னெடுக்கப்பட்ட தொழிலாளர் புரட்சியின் விளைவே இந்த மே தினம்.உலகத் தொழிலாளர்கள் உரிமைகளை வென்றெடுத்ததன் அடையாளமாக மே தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் வளர்ச்சிக்காகவும் ,பொருளாதார உயர்ச்சிக்காகவும் அயராது உழைக்கும் தொழிலாளர்களது உழைப்பு போற்றுதற்குரியது.
தற்போது உலகலாவிய ரீதியாக ஏற்பட்டுள்ள கொரோனா அச்ச சூழ்நிலையில் அளப்பரிய சேவையாற்றும் அனைத்து விதமான  சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் ஆகியோரும் இத் தருணத்தில் போற்றுதற்குரியவர்கள்.

உயிரை துச்சமென நினைத்து நாட்டிற்காகவும்,நாட்டு மக்களுக்காகவும் அளப்பரிய சேவையாற்றி வருகின்றனர்.
நாட்டிற்காகவும்,வீட்டிற்காகவும் உழைக்கும் தொழிலாளர்கள் அனைவரும் கொடிய வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கப்பட்டு; அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியும்,சுபீட்சமும் உண்டாக  வாழ்த்துகிறேன்.என மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Previous Post Next Post


Put your ad code here