பிலியந்தலை பொலிஸ் பிரிவு இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த பொலிஸ் பிரிவில் உள்ள சில கிராம சேவகர் பிரிவுகளை இன்று இரவு 10 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதேபோல, நாளை அதிகாலை 5 மணிமுதல் 10 கிராம சேவகர் பிரிவுகள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத்தளபதி மேலும் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து தனிமைப்படுத்தப்படும் கிராம சேவகர் பிரிவுகள்
தம்பே
கொரகாபிடிய
நம்பமுனுவ
படகெத்தர வடக்கு
பெல்லன்வத்த கிழக்கு
பெல்லன்வத்த மேற்கு
கெஸ்பேவ தெற்கு
மகந்தன கிழக்கு
மாவித்தர வடக்கு
மடபாத்த
இதேவேளை, மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரவ்வல வடக்கு கிராம சேவகர் பிரிவு நாளை அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளது.
Tags:
sri lanka news
