ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து அலுவலகங்களும் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டன..!!!


பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் உள்ளிட்ட அனைத்து பிராந்திய அலுவலகங்களையும் மீள் அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போதைய கொரோனா வைரஸ் பரவல் நிலைமையை கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous Post Next Post


Put your ad code here