ஒன்றுகூடல்கள், விருந்துகள், திருமணங்களை வீடுகளிலும் நடத்த முடியாது - இராணுவத் தளபதி..!!!


கொரோனா நிலமை காரணமாக, நட்சத்திர விடுதிகள், மண்டபங்களில் தடைசெய்யப்பட்ட கூட்டங்கள், விருந்துகள் மற்றும் திருமண நிகழ்வுகளை வீடுகளிலோ அல்லது பிற இடங்களிலோ நடத்த முடியாது என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

மேலும், ஏனைய வீடுகளுக்குச் செல்வதையும் விருந்தினர்களை மகிழ்விப்பதையும் தவிர்க்குமாறு இராணுவத் தளபதி பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டில் திருமணங்கள்,ஒன்றுகூடல்கள் மற்றும் விருந்துகளை நடத்த சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய தடை செய்யப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் திருமணங்களை நடத்தலாமா என்பது குறித்த முடிவு மே 20ஆம் திகதியன்று எடுக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளரின் சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here