தொற்று உறுதியானவர்களை கண்டறிய புதிய திட்டம்: மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!!!


கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களை கண்டறிவதற்காக புதிய பரிசோதனை முறைகளை பரிசீலித்து வருவதாக இலங்கை நனோ தொழிநுட்பத்தின் சிரேஷ்ட ஆய்வாளர், விஞ்ஞான பேராசிரியர் சஞ்சய பதீகே தெரிவித்துள்ளார்.

ஆர்.டி லேம்ப் தொழில்நுட்பத்தின் உதவியுடன் குறுகிய காலத்திற்குள் முடிவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், சாதாரண மக்களினால், குறைந்தளவான பணத்தை செலவிட்டு கொரோனா பரிசோதனைகளை இந்த புதிய முறைமையின் ஊடாக மேற்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார்.

அதற்கான பரிசோதனை உபகரணங்களைத் தயாரிப்பதற்கு தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையினால் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவப் பிரிவு, கராப்பிட்டி போதனா வைத்தியசாலை, பொரளை பரிசோதனை நிறுவகம், ஐ.டி.எச் உள்ளிட்ட வைத்தியசாலைகளில் இரசாயன ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post Next Post


Put your ad code here