மன்னார் உப்புக்குளம் புதிய தெரு பகுதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று இன்று சனிக்கிழமை (15) காலை7.30 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
எனினும் குறித்த முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற சாரதி பாய்ந்து உயிர்தப்பியுள்ளார்.
தனது வீட்டிற்கு செல்லும் போது முச்சக்கர வண்டியின் கீழ் பகுதியில் இருந்து புகை வெளியேறியுள்ளதோடு, முச்சக்கர வண்டி தீப்பற்ற ஆரம்பித்தது.
எனினும் குறித்த முச்சக்கர வண்டி முழுமையாக தீ பிடித்து எரிந்துள்ளது.
Tags:
sri lanka news


