தெஹிவளை ரொபட் பிரதேசத்தில் சட்டவிரோதமாக ட்ரோன் கெமராவொன்றை வானில் பறக்கச் செய்த இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (15) மாலை 6 மணியளவில் தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் குறித்த ட்ரோன் கெமராவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் இன்று (16) நீதிமன்றிலில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags:
sri lanka news
