தீப்பற்றிய கப்பலில் இருந்து கரையொதுங்கிய பொருட்களை எடுத்துச் சென்ற 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.
தீக்கிரையான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலிலிருந்து கடலில் வீழ்ந்த கொள்கலன்களில் அடங்கியிருந்த பொருட்கள் மற்றும் எரியுண்ட கப்பல் பாகங்கள் உள்ளிட்டவை நேற்று (27) நீர்கொழும்பை அண்டிய கடற்கரை பகுதிகளில் கரையொதுங்கியிருந்தன.
இவ்வாறு கரையொதுங்கிய, இரசாயனங்கள் உள்ளிட்ட மேலும் சில பொருட்களை வீடுகளுக்கு எடுத்துச்சென்ற நபர்களைத் தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
அத்துடன் பொருட்களை கொண்டு செல்ல பாரவூர்தியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
Tags:
sri lanka news
