மீண்டும் 5,000 ரூபாய்; வெளியான மகிழ்ச்சி செய்தி..!!!


அரசு ஊழியர்கள் அல்லாத குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு ரூ 5,000 கொடுப்பனவை மீண்டும் வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

எதிர்வரும் நாட்களில் கொடுப்பனவு வழங்கப்படும் என்றும், இதை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஒருங்கிணைப்பார் என்றும் அவர் கூறினார்.

நாட்டில் நிலவும் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், சமுர்த்தி பெறுநர்கள் மற்றும் முதியோர் கொடுப்பனவாகவும் 5,000 கொடுக்கப்படும் என்றார்.

கொரோனா தொற்றுநோயால் உருவாகியுள்ள பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் முந்தைய சந்தர்ப்பங்களில் குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு ரூ .5,000 கொடுப்பனவை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here